News December 11, 2024
ஆடு பகை குட்டி உறவா? குட்டி ரீவைண்ட் ஸ்டோரி

அன்புமணியின் மகள் சங்கமித்ரா தயாரிக்கும் ‘அலங்கு’ படத்தின் டிரெயிலரை ரஜினிகாந்த் வெளியிட்டிருப்பது அரசியலாகவும் மாறியுள்ளது. ‘காலம் எவ்வளவு வேகமாக சுத்துது பார்த்தீர்களா’ என சூரியவம்சம் தேவயானி டெம்பிளேட்டுடன் மீம்ஸ்கள் தெறிக்கின்றன. காரணம் 2002இல் ரஜினியின் பாபா படத்தை மக்கள் பார்க்க வேண்டாம் என ராமதாஸ் பேசியிருந்தார். ஆனால் அவரது பேத்தியின் முதல் படத்தின் அறிமுகமே அவரது கையால் வெளியாகியுள்ளது.
Similar News
News September 4, 2025
கூல்டிரிங்ஸ், புகையிலை பொருள்களுக்கு 40% வரி

சொகுசு கார்கள், கூல்டிரிங்ஸ், பான்மசாலா, புகையிலை பொருள்களுக்கு 40% வரிவிதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பிற்கு இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இந்த மாற்றங்கள் வரும் 22-ம் தேதி அமலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 3, 2025
உயிர்காக்கும் மருந்துகளுக்கு 0% வரி: FM

பீட்சா பிரட், பனீர் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக FM நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். உயிர்காக்கும் மருந்து பொருள்களுக்கான வரி 12%-ல் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதாகவும், அனைத்து மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கும் 18% வரிவிதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டிராக்டர், வேளாண் பொருள்களுக்கு 5% வரிவிதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
News September 3, 2025
BREAKING: ஜிஎஸ்டி வரம்பில் 12%, 28% நீக்கம்

ஜிஎஸ்டி வரியில் 12% மற்றும் 28% வரம்புகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனி 5%, 18% வரம்புகள் மட்டுமே தொடரும் என்றும், சிறப்பு வரி விதிப்பாக 40% வரம்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்த மாற்றம் செப்.22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.