News December 11, 2024
திருப்பத்தை ஏற்படுத்த போக்கும் இரட்டை இலை

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அடுத்தகட்ட செயல்பாடுகள் அதிமுகவின் உட்கட்டமைப்பை மட்டுமல்லாமல், தமிழகத்தின் மொத்த அரசியல் சூழ்நிலையையும் மாற்றும். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே சின்ன உரிமை தொடர்பான விவாதங்கள் அதிகரிக்கும் நிலையில், EC முடிவை எதிர்நோக்கி அனைத்து தரப்பும் காத்திருக்கின்றன. இவ்வழக்கின் தீர்ப்பின் தாக்கம் தமிழக அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்பமாக இருக்கும்.
Similar News
News August 27, 2025
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மல்லி தேநீர்!

கொத்தமல்லி விதை & தழைகளில் உள்ள பைட்டோஸ்டெரால் ரசாயனம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கொத்தமல்லி விதை & தழை, சுக்கு, மிளகு, மஞ்சள், நட்சத்திரப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால், மணமிக்க சுவையான மல்லி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.
News August 27, 2025
OTP பெறாமல் ஆன்லைன் சேவைகளே கிடையாது: HC

மத்திய, மாநில & தனியார் நிறுவனங்கள் பல்வேறு சேவைகளுக்காக OTP பெறுவது தனியுரிமை விதிகளுக்கு முரணானது என கூறி, OTP-க்கு தடை விதிக்க மதுரை HC-ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், இன்றைய காலகட்டத்தில் OTP பெறாமல் எந்த ஒரு ஆன்லைன் சேவையும் நடைபெறாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற DMK முன்னெடுப்பில் OTP பெறுவதற்கு HC தடை விதித்தது.
News August 27, 2025
மீண்டும் அதிமுகவில் இணைய முடியாது.. EPS அதிரடி முடிவு

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய <<17528723>>OPS<<>>, நிபந்தனையின்றி அதிமுகவில் இணைய தயார் கூறியதற்கு, ‘இணைக்க மாட்டோம்’ என்று கடந்த வாரம் EPS திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், நேற்று ஒன்றிணைய வேண்டும் என EPS-க்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து மூத்த தலைவர்கள் EPS-யிடம் ஆலோசிக்கையில், அவரை நீக்கியது நீக்கியதுதான், மீண்டும் இணைப்பு குறித்து பேச வேண்டாம் என EPS முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.