News March 23, 2024
திருப்பூர்: லாரி மோதி தொழிலாளி பலி

காங்கேயம் தாலுகா பரஞ்சேரி வழி காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன், கூலித் தொழிலாளி. இவர் காங்கேயம் ஈரோடு சாலையில் முள்ளிபுரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது மூணாறை சேர்ந்த சுப்பிரமணியன் ஓட்டிவந்த லாரி முருகேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
Similar News
News November 4, 2025
JUST IN: திருப்பூர் அருகே விபத்து

திருப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியின் வாகனம் பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி குழந்தைகளை அழைக்க சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளியின் வேன் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இவ்விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
திருப்பூர்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்

திருப்பூர் மக்களே, பட்டா மாற்றம், சிட்டா, சாதி சான்றிதழ், இருப்பீட மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு சாம் கண்டிப்பாக ஒருமுறையாவது விஏஓ, தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டியது இருக்கும். அப்போது அங்கு அதிகாரிகள் முறையாக பணி செய்யாமல் லஞ்சம் கேட்டால் (0421-2482816) என்ற எண்ணில் புகார் அளிக்கவும். (SHARE பண்ணுங்க)
News November 4, 2025
பல்லடம் அருகே தீ பற்றி எரிந்த பேருந்து

பல்லடம் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும்பாளி பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்புறம் தீ பற்றி எறிய தொடங்கியது. தொடர்ந்து உள்ளே இருந்த 15 பயணிகள் பத்திரமாக எந்த சேதமும் இன்றி உயிர்தப்பினர். இத்தீவிபத்தில் பேருந்து முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமானது


