News December 10, 2024

கஞ்சா வழக்கில் பெண்கள் இருவருக்கு 10 ஆண்டு சிறை

image

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி போலீசார் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் 25.390 கிலோ கஞ்சாவுடன் மஞ்சுளா, விமலா ஆகிய இரு பெண்களை கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை மதுரை மாவட்ட EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,00,000 அபராதம் விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.

Similar News

News August 20, 2025

தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

தேனி இளைஞர்களே.. நீதிமன்ற வேலை..! உடனே APPLY

image

தேனி இளைஞர்களே.., தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் உயர்நீதிமன்ற <>இணையதள பக்கத்திற்கு<<>> சென்று இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாவட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்தப்படுவர். SHARE IT.

News August 20, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்:

image

தேனி மாவட்ட அணைகளின் (ஆக.20) நீர்மட்டம்: வைகை அணை: 69.59 (71) அடி, வரத்து: 802 க.அடி, திறப்பு: 969  க.அடி, பெரியாறு அணை: 135.20 (142) அடி, வரத்து: 2001 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 38.80 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 46.14 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 49.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.

error: Content is protected !!