News December 10, 2024
BREAKING: திருச்சியில் நிலநடுக்கம்?

திருச்சி மணப்பாறை சுற்று வட்டாரத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டது. உடனே சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், இது பூகம்பம் அல்ல, இடி சத்தம் காரணமாகவே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News September 13, 2025
‘நான் தான் CM’ பார்த்திபனின் அரசியல் அவதாரம்

இன்று மாலை 4.46-க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு வரப்போகிறதாக, நடிகர் பார்த்திபன் ஒரு பதிவை போட்டு அனைவரையும் பரபரபாக்கினார். என்னவா இருக்குமென பலரும் காத்திருந்த நிலையில், ‘நான் தான் CM’ என்ற படத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ‘C.M. சிங்காரவேலன் எனும் நான்…. சோத்துக் கட்சி’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்த்திபனின் டிரேட் மார்க் ஸ்டெயில் பப்ளிசிட்டி இது.
News September 13, 2025
இந்தியாவை வெல்ல முடியும்: பாக்., கேப்டன் சூசகம்

ஆசிய கோப்பை தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் IND vs PAK போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாக்., கேப்டன் சல்மான் அலி அகா, இதேபோல் திட்டமிட்டப்படி தொடர்ந்து செயல்பட்டால் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என மறைமுகமாக இந்தியாவை குறிப்பிட்டுள்ளார். இதனால், இப்போட்டி மேலும் கவனம் ஈர்த்துள்ளது. பஹல்காம் தாக்குதலை கருத்தில்கொண்டு, இப்போட்டியை ரத்து செய்ய சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
News September 13, 2025
திமுகவுக்கு 13 மார்க்: அன்புமணி ரேட்டிங்

550 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதை கணக்கில் கொண்டால், அதற்கு வெறும் 13 மார்க் தான் என்ற அவர், இதனால் திமுக அரசு ஃபெயில் ஆகிவிட்டதாகவும் சாடியுள்ளார். முன்னதாக, அன்புமணி வெளியிட்டிருந்த ‘விடியல் எங்கே’ புத்தகத்தில் வேலைவாய்ப்புகள், மாதந்தோறும் மின் கணக்கீடு போன்றவை நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.