News December 10, 2024

பேருந்துகளில் இதை எடுத்து வந்தால் அபராதம்!

image

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேரி பேக்குகள் எடுத்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை நடத்துனரும், ஓட்டுனரும் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என உதகை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Similar News

News August 19, 2025

நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்!

image

நீலகிரி மாவட்டம் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கூடலூரில் 140 மில்லி மீட்டர் பதிவானது. மேல் கூடலூர் 136 மி.மீ, தேவாலா 94 மி.மீ, சேரங்கோடு 80 மி.மீ, பார்சன்ஸ் வேலி 74 மி.மீ, அவளாஞ்சி 73 மி.மீ, ஓவேலி 71 மி.மீ, நடுவட்டம் 70 மி.மீ, பந்தலூர் 62 மி.மீ, கிளன்மார்கன் 66 மி.மீ, செருமுள்ளி 45 மி.மீ, என மழை பதிவாகி இருந்தது.

News August 19, 2025

நீலகிரி இலவச கேஸ் சிலிண்டர் பெற அரிய வாய்ப்பு!

image

நீலகிரி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

நீலகிரி: உங்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு!

image

நீலகிரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
♦️ஆக.20ஆம் தேதி- கோத்தகிரி வட்டாரம், சமுதாய கூடம் வள்ளுவர் நகர்.
♦️ஆக.21ஆம் தேதி முதல் உதகை மண்டலம் நகராட்சி, தேவாங்கர் திருமண மண்டபம் உதகை.
♦️நடுவட்டம் பேருராட்சி, சமுதாய கூடம் பஞ்சாயத்து காலனி.
♦️கோத்தகிரி வட்டாரம், சமுதாய கூடம் கப்பட்டி.
♦️உதகை மண்டலம் வட்டாரம், சமுதாய கூடம் நேரு நகர்.
ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. SHARE பண்ணுங்க மக்களே.!

error: Content is protected !!