News December 10, 2024
Golden Globe விருதுக்கு தேர்வான இந்திய திரைப்படம்

அமெரிக்காவில் நடைபெறும் 82வது கோல்டன் குளோப் விருது விழாவில் ’All We Imagine As Light’ என்ற மலையாளப் படம் 2 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. ஆங்கிலம் அல்லாத மொழி மற்றும் சிறந்த இயக்குனர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இதுகுறித்து பேசிய இயக்குநர் பாயல் கபாடியா, “ இது எனக்கு மிகப் பெரிய கவுரவம். இந்த படத்தை இவ்வளவு பெரிய வெற்றிபெறச் செய்த அனைவருக்கு நன்றி” என்றார்.
Similar News
News September 13, 2025
மேடையில் கண் கலங்கிய கமல்..!

இளையராஜாவின் பாராட்டு விழாவில் பேசிய கமல், மேடையிலேயே கண் கலங்கினார். அவருக்கு பாராட்டு விழா எடுத்ததற்கு ரசிகனாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கமல் உருக்கமாக கூறினார். இளையராஜா எனக்கு அண்ணன் எனத் தெரிவித்த அவர், உனை ஈன்ற உலகுக்கு நன்றி என்ற பாடலை கண்கலங்க மேடையிலேயே பாடியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
News September 13, 2025
உங்களுக்கு IT நோட்டீஸ் வராம இருக்கணுமா?

உங்களை தேடி IT நோட்டீஸ் வருவதை தவிர்க்க, இந்த Limits-ஐ மீறாதீர்: *ஆவணம் இன்றி பணப்பரிசு Limit: ₹50000 *ஒரே நாளில் ஒருவரிடம் இருந்து பணம்பெறும் Limit: ₹2 லட்சம் *ஒரே நாளில் சேமிப்பு கணக்கில் கேஷ் டெபாசிட் Limit: ₹10 லட்சம் *ஒரே நாளில் கரன்ட் அக்கவுன்ட்டில் டெபாசிட் Limit: ₹50 லட்சம் *கிரெடிட் கார்டுக்கு ஒரே நாளில் ரொக்கமாக செலுத்தும் Limit: ₹1 லட்சம் *சொத்து விற்பனை Limit: ₹30 லட்சம்.
News September 13, 2025
விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்: ராமதாஸ்

அன்புமணி – ராமதாஸ் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் பாமக இரண்டாக பிரிந்து இருக்கிறது. இதனால் தான் பாமக இதுவரை கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில், தந்தை – மகன் பிரச்னை கடந்த 10-ம் தேதியே முடிந்து விட்டதாக சற்றுமுன் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தீயவை கீழே போகும், நல்லவை மேலே போகும் எனக் கூறிய அவர், யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.