News December 10, 2024

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இது மேற்கு-வட மேற்காக நகர்ந்து இலங்கை தமிழக எல்லையை கடக்கக்கூடும். இதன் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென MET தெரிவித்துள்ளது.

Similar News

News August 27, 2025

IND vs PAK: வாசிம் அக்ரமின் விருப்பம் இதுதான்

image

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பாக்., முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதை உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனவும், வரலாற்று பூர்வ நிகழ்வாக இது அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். எல்லை பதற்றம் காரணமாக கடந்த 2014 முதல் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.

News August 27, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 27, ஆவணி 11 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News August 27, 2025

சோஷியல் மீடியாவுக்கு கட்டுப்பாடு தேவை: SC

image

சோஷியல் மீடியாவில்(SM) வெளியிடப்படும் பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு SC அறிவுறுத்தியுள்ளது. SM-ல் பதிவுகள் வணிகமயமாகியதால், மாற்றுதிறனாளிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்படுவதாக கோர்ட் கவலையும் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக 5 யூடியூபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

error: Content is protected !!