News March 23, 2024
குமரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச்.23) காலை 10 மணி வரை குமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
Similar News
News April 7, 2025
நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை கோடைகால விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 13 – முதல் மே 4 வரை ஒரு மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்தும் (வ. எண்.06012), தாம்பரத்தில் இருந்து(வ. எண்.06011) திங்கட்கிழமையும் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறையில் இது சென்னை செல்வோருக்கு பயனுள்ளதாக அமையும்.
News April 7, 2025
குமரியில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 120 அங்கன்வாடி பணியாளர்கள், 2குறு அங்கன்வாடி பணியாளர், 11அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
News April 7, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர்மட்ட விபரம்

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று (ஏப்.7) 30.25 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.80 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.76 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.85 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 51 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 105 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.