News December 10, 2024
வெள்ளி விழா கல்வெட்டில் எம்ஜிஆர் பெயர்: தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் நிறுவப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். எனவே திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு கல்வெட்டில் எம்ஜிஆரின் பெயரை வைக்க வேண்டும் என்று குமரி தொகுதி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News August 22, 2025
100 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு – ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படிப்பு பயில விரும்பும் மாணவ – மாணவிகளுக்கு கல்விக்கடன் பெற ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார். இதில் இதுவரை ரூ.28 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும், மாணவ-மாணவியர்கள் உயர்கல்விக்கு கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பித்து கடன் பெறலாம் என்றும் அவர் கூறினார்.
News August 22, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் 4724 மனுக்களுக்கு உடனடித் தீர்வு

குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் 120 முகாம்கள் நடத்தப்பட்டு 62,638 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சொத்து வரி, பிறப்பு சான்றிதழ், பெயர் மாற்றம், மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 4724 மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
News August 22, 2025
குமரியில் 18 பகுதியில் முகாம்கள்..!

உழவரைத்தேடி வேளாண்மை முகாம் இன்று(ஆக.22) சுசீந்திரம், பறக்கை, நாவல்காடு, நுள்ளிவிளை, வெள்ளிமலை, கண்ணனூர், பளுகல், இனயம்புத்தன்துறை, அதங்கோடு, அகஸ்தீஸ்வரம், தர்மபுரம் தெற்கு, தோவாளை, குமாரபுரம், நெய்யூர், குலசேகரம், அண்டுகோடு, கிள்ளியூர், குளப்புரம் ஆகிய 18 கிராமங்களில் நடக்கவுள்ளது. இம்முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு குறைகள் & கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெற ஆட்சியர் அறிவிப்பு.