News December 10, 2024
9 செவ்வாய்கிழமைகளில் முருகன் வழிபட்டால்….

9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகி , செவ்வாய் தோஷம் பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அதிகாலையில் நீராடி, முருக பெருமானை வழிபாடு செய்யவேண்டும். மாலையில் விரதத்தை முடிக்கும் வரை அன்றைய தினம் பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதத்தையும் கடைபிடிக்க வேண்டும். காலையில் இருந்து மாலை வரை கந்தசஷ்டி கவசம் உச்சரிக்க வேண்டும்.
Similar News
News August 27, 2025
கோவாவில் அக்.30 முதல் செஸ் உலகக்கோப்பை…

கோவாவில் FIDE செஸ் உலகக் கோப்பை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.30 முதல் நவ.27 வரை நடக்கும் செஸ் உலகக் கோப்பையில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கின்றனர். 8 ரவுண்டுகளாக, நாக் அவுட் முறையில் நடக்கும் இந்த தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை 20 லட்சம் டாலர்கள் ஆகும். முதல் 3 இடங்களுக்குள் வந்தால் 2026 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறலாம்.
News August 27, 2025
அதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. ஓபிஎஸ் அறிவிப்பு

2026 தேர்தலில் அதிமுக ஆட்சி தான் வரவேண்டும் என சேலத்தில் OPS பேசியுள்ளது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அமைதி காத்துவந்த OPS, பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என ஆதரவாளர்கள் நினைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள் என விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
News August 27, 2025
செல்ஃபி எடுப்பதில் இந்தியா ஆபத்தான நாடு

அமெரிக்காவின் The Barber சட்ட நிறுவனம், கடந்த 2014 – 2025 வரை செல்ஃபி எடுக்கும் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது. செல்ஃபி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவித்த செய்திகள், கட்டுரைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1% என்ற அளவில் இந்தியா (214 மரணங்கள்) முதலிடத்தில் உள்ளது. 45 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்தில் உள்ளது.