News December 10, 2024

கேரளா அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல்

image

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கேரளா அரசு பேருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று(டிச.,09) இரவு வந்து கொண்டிருந்தது. சாமியார் மடம் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பேருந்தில் கல்வீசி உள்ளனர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்தது. ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விட்டுள்ளார். அரசு பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 22, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் 4724 மனுக்களுக்கு உடனடித் தீர்வு

image

குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் 120 முகாம்கள் நடத்தப்பட்டு 62,638 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சொத்து வரி, பிறப்பு சான்றிதழ், பெயர் மாற்றம், மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 4724 மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News August 22, 2025

குமரியில் 18 பகுதியில் முகாம்கள்..!

image

உழவரைத்தேடி வேளாண்மை முகாம் இன்று(ஆக.22) சுசீந்திரம், பறக்கை, நாவல்காடு, நுள்ளிவிளை, வெள்ளிமலை, கண்ணனூர், பளுகல், இனயம்புத்தன்துறை, அதங்கோடு, அகஸ்தீஸ்வரம், தர்மபுரம் தெற்கு, தோவாளை, குமாரபுரம், நெய்யூர், குலசேகரம், அண்டுகோடு, கிள்ளியூர், குளப்புரம் ஆகிய 18 கிராமங்களில் நடக்கவுள்ளது. இம்முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு குறைகள் & கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெற ஆட்சியர் அறிவிப்பு.

News August 21, 2025

குமரி: 10th போதும் மேனேஜர் வேலை – APPLY NOW !

image

குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல ஹெல்த்கேர் நிறுவனத்தில் (Duty Manager)க்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊதியமாக 15,000 – 25,000 வரை வழங்கபடுகிறது. 10th படித்திருந்தால் போதும் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இங்கே<> க்ளிக் <<>>பண்ணி விண்ணப்பியுங்க. வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!