News December 10, 2024

சற்றுமுன்: SM கிருஷ்ணா காலமானார்

image

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வால் பெங்களூருவில் காலமானார். இவர், 1999 முதல் 2004 வரை கர்நாடகத்தின் முதல்வராகவும் 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிர ஆளுநராகவும் பதவி வகித்தார். பின்னர், 2009 முதல் 2012 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருதளித்து கௌரவித்தது.

Similar News

News August 27, 2025

கோவாவில் அக்.30 முதல் செஸ் உலகக்கோப்பை…

image

கோவாவில் FIDE செஸ் உலகக் கோப்பை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.30 முதல் நவ.27 வரை நடக்கும் செஸ் உலகக் கோப்பையில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கின்றனர். 8 ரவுண்டுகளாக, நாக் அவுட் முறையில் நடக்கும் இந்த தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை 20 லட்சம் டாலர்கள் ஆகும். முதல் 3 இடங்களுக்குள் வந்தால் 2026 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறலாம்.

News August 27, 2025

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. ஓபிஎஸ் அறிவிப்பு

image

2026 தேர்தலில் அதிமுக ஆட்சி தான் வரவேண்டும் என சேலத்தில் OPS பேசியுள்ளது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அமைதி காத்துவந்த OPS, பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என ஆதரவாளர்கள் நினைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள் என விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

News August 27, 2025

செல்ஃபி எடுப்பதில் இந்தியா ஆபத்தான நாடு

image

அமெரிக்காவின் The Barber சட்ட நிறுவனம், கடந்த 2014 – 2025 வரை செல்ஃபி எடுக்கும் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது. செல்ஃபி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவித்த செய்திகள், கட்டுரைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1% என்ற அளவில் இந்தியா (214 மரணங்கள்) முதலிடத்தில் உள்ளது. 45 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்தில் உள்ளது.

error: Content is protected !!