News December 10, 2024

BSFஇல் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க

image

இந்திய எல்லையைக் காக்கும் பணியில் உள்ள BSFஇல் காலியாக உள்ள 275 இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதில் 127 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கானது. எஞ்சிய 148 இடங்கள் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர விரும்புவோர் வருகிற 30ஆம் தேதி வரை https://rectt.bsf.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு பகிரலாமே.

Similar News

News March 8, 2026

BREAKING: அதிமுக கூட்டணியில் விஜய்? பரபரப்பு தகவல்

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் விஜய்யை கொண்டுவர தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விஜய் கூட்டணிக்கு வருகிறாரா? இல்லையா என்பதை தெரிந்துகொண்டு தொகுதிப்பங்கீடு தொடர்பான முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

News March 8, 2026

நகைக்கடன் தள்ளுபடி… வெளியானது மகிழ்ச்சி செய்தி

image

திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் மாநாட்டில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை CM ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். இதனால், எந்த மாதிரியான அறிவிப்பு வெளியாகும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு இலவச மானிய சிலிண்டர், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 8, 2026

அரசியல் அடிப்படை மாறணும்: சீமான்

image

தமிழக அரசியலில் அடிப்படை மாற வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இந்திய கட்சிகளுக்கு மும்மொழி, திராவிட கட்சிகளுக்கு இருமொழி, எங்களுக்கு (நாதக) தமிழ் மொழிதான் கொள்கை என்று தெரிவித்துள்ளார். ஆள், மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டாம், அரசியல் அடிப்படை மாற வேண்டும் எனக் கூறிய அவர், சகித்து சகித்து அடிமையாக உள்ளோம்; புரட்சியால்தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்றார்.

error: Content is protected !!