News December 10, 2024

4 பேருக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வக் குழந்தை ❤️❤️

image

ஏதேனும் குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளை தெய்வக் குழந்தை என்று கூறுவோம். அதை உண்மையாக்கியுள்ளது இச்சம்பவம். புதுச்சேரியை சேர்ந்த நவ்தீப்புக்கு (11), பிறக்கும் போதே ஆட்டிசம் குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் நவ்தீப் நேற்று இறந்தான். இதையடுத்து, சிறுவனின் கண்களை அவரது பெற்றோர் தானம் அளித்தனர். இதன் மூலம் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்த 4 பேருக்கு பார்வை கிடைக்க போகிறது.

Similar News

News April 6, 2026

உங்க வாக்குச்சாவடி எங்கே? ஒரு ஆப் போதும்!

image

தேர்தல் அன்று உங்க ஏரியாவில் இரண்டு இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறலாம். அதனால், நம் வாக்குசாவடி எது என்ற குழப்பம் எழலாம். அந்த பிரச்னையை தீர்க்கதான் ECI , ‘ECINet’ என்ற <>App-ஐ<<>> அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களின் வாக்காளர் அட்டை எண், மொபைல் நம்பரை சரியாக கொடுத்தால் போதும். வாக்குசாவடி எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும். வரும் 23-ம் தேதி வாக்களிக்க மறந்துடாதீங்க!

News April 6, 2026

₹500 கோடி ஊழல்.. அன்பில் மகேஸ் மீது குற்றச்சாட்டு

image

திருவெறும்பூரில் அன்பில் மகேஸுக்கு எதிராக அதிமுக சார்பில் EX MP குமார் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அங்கு பரப்புரை மேற்கொண்ட குமார், பள்ளிக்கல்வித்துறையில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ திட்டத்தில் பினாமி நிறுவனம் மூலம் அன்பில் மகேஸ் ₹500 கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதை மறுத்தால், பினாமி நிறுவனத்தின் பெயரை வெளியிட தயார் எனவும் சவால் விடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 6, 2026

பிரசாரத்தை ரத்து செய்த விஜய்.. கடைசி நேர அறிவிப்பு!

image

சென்னையில் இன்று விஜய் மேற்கொள்ளவிருந்த பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தி.நகரில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், வில்லிவாக்கம், தி.நகரில் தலா 1 மணி நேரம் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அது குறைவான நேரம் எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட விஜய் முடிவு செய்துள்ளாராம்.

error: Content is protected !!