News December 9, 2024
தீபத் திருவிழா: தி.மலைக்கு சிறப்புப் பேருந்துகள்

கார்த்திகை தீபத் திருவிழா, பௌர்ணமியை ஒட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,982 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 8,127 பேருந்துகள், வரும் 12ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
Similar News
News March 4, 2026
சென்னை: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

சென்னை மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News March 4, 2026
வேற லெவலாக மாறப்போகும் சென்னை

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் அதிவேக சோதனை ஓட்டம் நாளை 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. தண்டவாளத்தின் உறுதித்தன்மை, சிக்னல் அமைப்பு, மின்சார வழித்தடம், ரயில் நிலையத்தின் தரம் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 10ம் தேதி முதல் பறக்கும் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
News March 4, 2026
தி.நகர் கிளைமாக்ஸ்; நூலிழையில் தப்பிய திமுக!

கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஜே.கருணாநிதி வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுவே இங்கு போட்டி எவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதற்குச் சான்று. அதிமுக இந்த முறை தனது பலமான வேட்பாளரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், வணிக வளாகங்களில் நிலவும் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை ஆகியவை மக்களின் குறையாக உள்ள நிலையில், இந்த முறை வெற்றி யாருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.


