News December 9, 2024

குடும்பத்துக்கே எமனாக மாறிய டீ..!

image

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் டீ குடித்து உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. பன்ஸ்வாராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இன்று காலை ஒன்றாக அமர்ந்து டீ குடித்துள்ளனர். ஆனால், டீ தூளுக்கு பதில் பூச்சிக்கொல்லி பவுடர் கலந்ததால் சிறிது நேரத்திலேயே மருமகள், மாமியார், பேரன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மாமனாரும், கணவரும் ICU-வில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்ன கொடுமைங்க இது..

Similar News

News September 13, 2025

விஜய்க்கு எதிராக டிரெண்டாகும் #சனியின்_பயணம்

image

திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை விஜய் தொடங்கியுள்ள நிலையில், தவெகவினர் திரளாக பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தொண்டர்கள் வெள்ளத்திற்கு இடையே ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை பகுதிக்கு விஜய்யின் வாகனம் ஊர்ந்து செல்கிறது. இதனிடையே, விஜய்க்கு எதிராக ஒருதரப்பினர் #சனியின்_பயணம் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம், #தமிழகவெற்றிக்கழகம் ஹேஷ்டேக்கும் டிரெண்டாகிறது.

News September 13, 2025

நேபாள் அமைதிக்கு இந்தியா உறுதுணை: PM மோடி

image

நேபாளத்தில் நடந்த Gen-z போராட்டத்தின் போது, அந்நாட்டின் பிரதமர் ராஜினாமா செய்ததால், இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் சுஷிலா கார்கிக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

BREAKING: அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்

image

2026 தேர்தலுக்காக அதிமுகவில் புதிய மண்டல IT விங் நிர்வாகிகளை EPS அறிவித்துள்ளார். வேலூர் மாநகர் – S.தரணிதரன், வேலூர் புறநகர் – நாகேந்திரன், திருப்பத்தூர்-மணிகண்டன், தி.மலை வடக்கு-ஜானி, தி.மலை தெற்கு – ரித்தீஷ், தி.மலை கிழக்கு-அக்ரி பாலாஜி, தி.மலை மத்தி-ராஜசேகர், ராணிப்பேட்டை கிழக்கு-நிவாஸ், ராணிப்பேட்டை மேற்கு – சரவணன் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளார்.

error: Content is protected !!