News December 9, 2024

marksheet-க்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் சான்றிதழ் கோரி அரசு தேர்வுகள் இயக்கத்தில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 13, 2025

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: CM ஸ்டாலின்

image

செப்.15-ம் தேதி தயாராக இருக்க திமுகவினருக்கு ஸ்டாலின் நாள்தோறும் புதிய கட்டளைகளை விடுத்து வருகிறார். தற்போது, ‘தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் ஆகியவற்றை எந்நாளும் காப்பேன்! ஆதிக்கச் சக்திகளின் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என உறுதிமொழி ஏற்க தயாராகுங்கள் என ஆணையிட்டுள்ளார். அண்ணாவின் பிறந்தநாளில் 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக தீவிரப்படுத்தியுள்ளது.

News September 13, 2025

மத்திய அரசில் 1,543 வேலைவாய்ப்பு!

image

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷனில், களப்பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணிகளுக்கு 1,543 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, எலெக்ட்ரிக்கல்/சிவில் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (பொறியியல்) பட்டமும், 1 வருட அனுபவமும் அவசியம். இதற்கு, மாதம் ₹30,000-₹1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு செப்.17-க்குள் https://www.powergrid.in/en -ல் விண்ணப்பியுங்கள். SHARE பண்ணுங்க.

News September 13, 2025

BCCI புதிய தலைவர் இவரா?

image

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே அடுத்த BCCI தலைவர் என தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் ரோஜர் பின்னி BCCI தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். வரும் 28-ல் BCCI தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் கிரண் மோர் வரவையே ஆமோதித்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக 49 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகளில் கிரண் மோர் விளையாடியுள்ளார்.

error: Content is protected !!