News December 9, 2024
சூளகிரி அருகே ஒற்றை காட்டு யானை முகாம்

சூளகிரி தாலுகா ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. சூளகிரி வனப்பகுதி கிராமங்களான குண்டகுறுக்கி, எலசேப்பள்ளி, கானலெட்டி, கொரகுறுக்கி, செட்டிப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி, கொட்டாங்கிரி பாப்பனப்பள்ளி, பட்டாகுருப்பரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமத்தில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் விவசாய காவலுக்கு செல்ல வேண்டாம் என இன்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Similar News
News August 21, 2025
எடப்பாடி பழனிசாமி இரங்கல்.. 10 லட்சம் நிதியுதவி.!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த தீவிர விசுவாசி க.தங்கராஜ், 12.8.2025 அன்று எழுச்சி பயண பிரச்சாரத்திலிருந்து வீடு திரும்பும் போது நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
News August 21, 2025
உயர்கல்வியில் சேர முகாம்கள்.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

2024 – 2025 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் & தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் உயர்கல்வியில் சேர்த்திடும் வண்ணம் உயர் கல்வி வழிகாட்டல் சார்ந்த ஆலோசனை முகாம்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. உயர் கல்வி பயில ஆர்வமுள்ள மாணவர்கள் இம்முகாம்களில் பயன்பெறலாம் என சமூக வலைத்தளத்தில் நேற்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
விழித்தெழு மனிதி வினாடி வினா போட்டி.!

உங்களுடன் ஸ்டாலின் போட்டிகள்.. விழித்தெழு மனிதி வினாடி வினா போட்டி. தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (டிஐபிஆர்) TNDIPR யின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்படும் போஸ்டர்கள் குறித்து செப்டம்பர் 10ம் தேதி முதல் கேள்விகள் கேட்கப்படும். போட்டியில் கலந்து விருப்பமுள்ளவர்கள் QR Code- யை ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம் என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.