News December 9, 2024
ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர INDIA கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரியசக்தி மின்திட்டத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக, அதானி மீது புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்னையை கையிலெடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மாநிலங்களவை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 3, 2026
ஆதிதிராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிகள்

தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகு கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர தகுதியான நபர்கள் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று குமரி ஆட்சியர் அழகுமீனா கூறியுள்ளார்.
News March 3, 2026
திமுக – காங்., கூட்டணி.. இதுவே கடைசி முயற்சி

திமுக – காங்., இடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக காங்., நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில், கார்கே வேண்டுகோளை ஏற்று, குழப்பத்தை சரி செய்ய கடைசி முயற்சியாக செல்வப்பெருந்தகை சிதம்பரம் ஆகியோர் ஸ்டாலினை சற்றுநேரத்தில் சந்திக்கவிருக்கிறார். ஒருவேளை, கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால், எவ்வளவு தொகுதி ஒதுக்கீடு செய்யலாம் என்பது குறித்து ஸ்டாலினும் ஆலோசிக்கவிருக்கிறார்.
News March 3, 2026
₹3,200 + ₹3,500 + ₹4,000.. ஸ்டாலின் அறிவித்தார்

மகளிர் உரிமைத் தொகையுடன் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ₹2,000 வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, *29 லட்சத்து 29 ஆயிரம் முதியோர், கைம்பெண்களுக்கு ₹1200 +₹2000 என மொத்தம் ₹3200, *ஐந்து லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1500 +₹2000 என மொத்தம் ₹3500, *பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு மொத்தம் ₹4000 வரவு வைக்கப்பட்டுள்ளது.


