News December 9, 2024
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பட்டாசு அச்சு தொழில் மீதான ஜிஎஸ்டி வரியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 24வது மாவட்ட மாநாடு முன்னிட்டு செம்படை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
Similar News
News March 12, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காவலர் கைது

வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடையில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து முருகேஸ்வரி மாட்டு தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து முருகேஸ்வரி மகன்களான மாரீஸ்வரன், காவலர் பூமாரிமுத்து ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
News March 12, 2026
ஸ்ரீவி: 2 இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை

விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் அழகர்சாமி(24), பாலசுப்பிரமணி(26). நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் போக்சோ நீதிமன்ற நீதிபதி அழகர்சாமி, பாலசுப்பிரமணி ஆகிய இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News March 11, 2026
BREAKING சிவாகாசி: பட்டாசு ஆலைக்குள் வெடி விபத்து

வெம்பக்கோட்டை அருகே வெற்றிலையூரணியில் விஜயகுமாருக்கு சொந்தமான ரோஸ் பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பிலிருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலாளர்கள் இன்றி பூட்டிக் கிடந்த குடியிருப்பில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மின் வயர் அறுந்து விழுந்ததால் பட்டாசுகள் வெடித்து சிதறி குடியிருப்பு சேதமடைந்தது தெரியவந்தது.


