News December 9, 2024
வசூல் வேட்டையாடும் ‘புஷ்பா-2’

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா-2’ பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ₹829 Cr வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிவேகமாக ₹800 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக அதிகளவில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தெலங்கானாவில் இன்று முதல் கட்டணம் சற்று குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
வாட்டர் பெல்: பெற்றோர் முக்கிய வேண்டுகோள்

‘வாட்டர் பெல்’ எனும் திட்டம் தமிழக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீர் பருகுவதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஸ்டீல் (அ) செம்பு பாட்டில்களைக் கொண்டுவர அரசு பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம், தமிழை வளர்க்கும் தமிழக அரசு ‘தண்ணீர் மணி’ என்று திட்டத்தின் பெயரை மாற்ற பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
News July 5, 2025
மதுரை எய்ம்ஸில் ஒரு கட்டடம் ஜனவரியில் செயலாக்கம்

2026 ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் ஒரு கட்டடம் செயல்பாட்டுக்கு வரும் என்று எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற ஜனவரிக்குள் லேப், ஹாஸ்டல் & 150 நோயாளி படுக்கைகள் கட்டமைக்கப்படும் என்றார். 2027-க்குள் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தற்போது ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
News July 5, 2025
இன்று நிலநடுக்கம், சுனாமி பீதியில் ஜப்பான் மக்கள்!

புதிய பாபா வாங்கா என அழைக்கப்படும் ரியோ தாட்சுகியின் கணிப்பால் ஜப்பான் மக்கள் இன்று பீதியில் ஆழ்ந்துள்ளனர். 2025 ஜூலை 5-ம் தேதி ஜப்பானில் சுனாமி வரும் என 2021-ம் ஆண்டிலேயே அவர் கணித்திருந்தார். இதனிடையே, ஜப்பானின் டொகாரா தீவில் கடந்த வாரம் 900 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாட்சுவின் கணிப்பு நடக்குமோ என அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜப்பான் அரசு இதனை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது.