News December 9, 2024
பல கோடிக்கு புதிய பங்களாவா? அண்ணாமலை மறுப்பு

கோவையில் பல கோடி ரூபாய்க்கு புதிய பங்களா வாங்கியிருப்பதாக வெளியான தகவலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார். கோவையில் பங்களா வாங்கும் அளவுக்கு தனது நிதிநிலைமை இல்லை என்றும், கோவைக்கு வரும் போதெல்லாம் தனது மாமனார் வீட்டிலேயே தங்கி வருவதாகவும் அவர் பதிலளித்துள்ளார். தன்னை காண அங்கு வருவோர் இடவசதியின்றி வெளியே நிற்கும் நிலைதான் உள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
Similar News
News March 7, 2026
உடனே 94450 30725 எண்ணுக்கு HI அனுப்புங்க

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவையை விரைவாக பெற புதிய வாட்ஸ்அப் எண் 94450 30725-ஐ தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த எண்ணுக்கு ‘HI’ என குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். உடனே ஆம்புலன்ஸ் சேவை கிடைத்துவிடும். மேலும், மொபைல் ஜிபிஎஸ் மூலம் விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ் துல்லியமாக சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்க.
News March 7, 2026
5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் இந்த <
News March 7, 2026
நேபாளத்தில் புதிய ஆட்சி.. இந்தியாவுக்கு நன்மையா?

பாலேன் ஷா தலைமையில் நேபாளத்தில் ஆட்சி அமையவுள்ளது. இச்சூழலில், இந்தியாவுடன் நேபாளம் சுமூகமான உறவை கொண்டிருக்குமா என்பது விவாதமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை ஷா பேசியிருந்தாலும், அவர் சீனாவுடன் நெருக்கமான உறவில் இல்லாதது இந்தியாவுக்கு நன்மை என பார்க்கப்படுகிறது. அத்துடன், தேர்தல் அறிக்கையில் வெளிநாட்டு உறவுகளில் சுமுகமான போக்கை விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.


