News December 9, 2024
தி.மலையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

தி.மலை மாவட்டத்தில் அரையாளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்பிராரம்பிப்பு பணிகள் நடைபெறுவதால் தச்சூர் விண்ணமங்கலம் மருசூர் அரையாளம் மதுரை பெரும்பட்டூர் நடுப்பட்டு தெள்ளார் நமத்தோடு கங்காபுரம் ஆவணியாபுரம் சாத்தமங்கலம் மேலானூர் ஆகாரம் அன்மருதை களம்பூர் கஸ்தம்பாடி அய்யம்பேட்டை முனுக்கப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
ஆரணியில் அதிரடி; அதிமுகவிற்கு தாவிய OPS ஆதரவாளர்கள்

ஆரணியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஆர்.டி.ஏழுமலை, எஸ்.தங்கதுரை, ஜி.மணிகண்டன், கே.சதாசிவம், ரவி, கே.ரமேஷ், எஸ்.ஆறுமுகம், எஸ்.பாண்டியன், கஜேந்திரன், ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர், மத்திய மாவட்ட அதிமுக செயலாளரான ஜெயசுதா லட்சுமிகாந்தன் முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர். OPS ஆதரவாளர்கள் பலர் திமுகவில் இணையும் நிலையில், அதிமுகவில் இணைத்து பேசுபொருளாகி உள்ளது.
News March 8, 2026
தி.மலை: தறிகெட்டு ஓடிய பைக்; துடிதுடித்து பலி!

செங்கம் அருகே அம்மாபாளையம் – புதுப்பாளையம் சாலையில் ஒரு டூவீலரில் சென்ற புதூர் செங்கம் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (19), சூர்யா (19), சந்துரு (18) ஆகியோர் சென்றனர். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த மூவரும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிவப்பிரகாசம் துடிதுடித்து உயிரிழந்தார். இருவர் சிகிச்சையில் உள்ளனர்.
News March 8, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.7) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


