News December 9, 2024
74 வயதில் முட்டை ஈன்ற உலகின் வயதான பறவை

பறவைக்கு 74 வயதா? என சட்டென ஆச்சரியமாக இருக்கும். 74 வயதில் பறவை ஒன்று 60வது முட்டை இட்டுள்ளது. காட்டில் வாழும் பல பறவைகள் 100 வயது வரை வாழ்கிறது. அல்பாட்ராஸ் இனத்தைச் சேர்ந்த கடற்பறவையான இப்பறவை தான் உலகின் வயதான பறவை எனப்படுகிறது. இப்பறவை இனம் சராசரியாக 68 வயது வரை வாழக்கூடியவை. 74 வயதில் ஆரோக்கியமாக இருக்கும் விஸ்டம் என பெயர்கொண்ட இது இதுவரை சுமார் 30 குஞ்சுகளைப் பொரித்திருக்கும்.
Similar News
News August 30, 2025
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு குவியும் தங்கம்

16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 52 தங்கம் உள்பட 103 பதக்கங்கள் குவித்துள்ளது. நேற்று நடத்த 25மீ செண்டர் டயர் பிஸ்டல் பந்தயத்தில் குர்பிரீத், ராஜ்கன்வார், அங்குர் கோயல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1733 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான டிராப் பிரிவில் அங்குர் மிட்டல் 107 புள்ளிகள் எடுத்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசமாக்கினார்.
News August 30, 2025
புரூஸ் லீ பொன்மொழிகள்

★அறிவு உங்களுக்கு அதிகாரத்தை தரலாம், ஆனால் நல்ல குணம் மட்டுமே மரியாதையை தேடிக் கொடுக்கும்
★நீங்கள் எதைச் சிந்திக்கிறீர்களோ, அதை நோக்கியே உங்கள் வாழ்க்கை நகரும்.
★பெரும் முயற்சிகள் தோல்வியுற்றாலும் கூட அவை போற்றத்தக்கவை.
★மகிழ்ச்சியாக இருங்கள், ஆனால் ஒருபோதும் திருப்தி அடையாதீர்கள்.
News August 30, 2025
எதிர்பார்ப்பை மிஞ்சிய இந்தியாவின் GDP

2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.8% என தரவுகள் தெரிவிக்கின்றன. ஹோட்டல், நிதி, ரியல் எஸ்டேட் உள்ளிட்டவை இந்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணங்களாம். RBI கணிப்பை விட GDP அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக 2024 ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் GDP 8.4% இருந்தது. அதன்பின் ஐந்து காலாண்டிற்கு பிறகு தற்போது 7.8% அதிகரித்துள்ளது.