News December 9, 2024

காசோலையில் ‘மட்டும்’ என ஏன் எழுதுறோம் தெரியுமா?

image

இந்த சந்தேகம் உங்களுக்கு வந்தே இல்லையா? காசோலையில் ₹10,000 என பணத்தை எழுதிய பிறகு, பத்தாயிரம் ரூபாய் ‘மட்டும்’ என குறிப்பிடுவார்கள். இந்த ‘மட்டும்’ ஏன் தெரியுமா? காசோலையில் குறிப்பிட்ட தொகைக்கு பிறகு எண்களைச் சேர்த்து விடாமல் இருக்கவும், குளறுபடி, ஏமாற்று வேலைகளை தவிர்க்க இந்த வழக்கம் வந்துள்ளது. (எடுத்துக்காட்டு) ₹10,000 எழுதிய பிறகு, ₹1,00,000 என மாற்றிவிடாமல் இருக்க இந்த நடைமுறை வந்துள்ளது.

Similar News

News March 7, 2026

BREAKING: மகளிருக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்

image

மானிய விலையில் நாப்கின் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் TN அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் மானிய விலை அல்லது இலவசமாக நாப்கின் வழங்க உத்தரவிடக்கோரி லட்சுமி ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், கூடுதல் முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவது குறித்த விவரங்களை அரசு தெரிவிக்கும் என நம்புவதாக கூறிய நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

News March 7, 2026

FLASH: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

image

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை 12.2% உயர்ந்துள்ளது. அதனால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $90.90 ஆனது. அதன் தாக்கத்தாலேயே 10 மாதங்களுக்கு பிறகு இந்திய சந்தையில் <<19316790>>வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்<<>> விலை இன்று அதிகரித்தது. குறிப்பாக 2020 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கச்சா எண்ணெய் உச்சம் தொட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 7, 2026

விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை: அண்ணாமலை

image

மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எரிவாயு பயன்பாடு 45% அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!