News March 23, 2024

செங்கல்பட்டில் மாணவி விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாலா (39), ஜெயபிரதா (38) இவர்களுடைய மகள் ஜெய்மதிபாலா (12) ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். மார்ச்.22 தினமான நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவி ஜெய்மதிபாலா (12) மரகன்றுகளை வழக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை மிதிவண்டியில் சென்று மரகன்றுகளை வழங்கினார்.

Similar News

News January 26, 2026

செங்கல்பட்டு: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருத்தல் உடனே டாக்டரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 26, 2026

செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை பட்டா பெற அரிய வாய்ப்பு

image

தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் மூலம் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மனை பட்டா( 1 சென்ட்)வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு கலெக்டர் அல்லது தாலுகா வட்டாட்சியரிடம்(தாசில்தாரிடம்)மனுவை பெற்று, அதனை பூர்த்தி செய்து முகவரி சான்றிதழ், வீட்டு வரி,மின்சார ரசீதுகளை வட்டாட்சியரிடம் கொடுத்தாலே போதும். ஷேர் செய்யுங்கள்.

News January 26, 2026

செங்கல்பட்டு: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!