News December 9, 2024
திங்கள்கிழமை சிவனை வணங்கினால்…

16 திங்கட்கிழமை சிவன் – பார்வதியை வழிபாடு செய்தால், மனகஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை மேற்கொள்ள, ஒவ்வொரு திங்கள் காலையில் நீராடி உண்ணாமல் சிவன் பார்வதிக்கு பூஜை செய்யவேண்டும். உணவிற்கு பதிலாக பழச்சாறுகள், பால், பழம் எடுத்து கொண்டு பூஜை செய்யலாம். வில்வ இலைகள், செவ்வரளி மலர்கள், சங்கு பூக்களை படைக்கலாம். நைவேத்தியமாக பழங்கள் இயன்ற பாயாசம், சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம்.
Similar News
News March 21, 2026
தேர்தல் தூதராக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், தஞ்சாவூர் தேர்தல் தூதுவர்களாக “தஞ்சை தலையாட்டி பொம்மை” அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தஞ்சை பெரிய கோயில் அருகில் கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். மாவட்ட SP ராஜாராம், DRO தியாகராஜன், RDO நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட தேர்தல் தூதராக தலையாட்டி பொம்மை அமைக்கப்பட்டு உள்ளது .
News March 21, 2026
வேட்பாளர்களின் சமூக வலைதள விவரங்களை கேட்கும் ECI

வேட்புமனுவில் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள (SM) கணக்கு விவரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ECI தெரிவித்துள்ளது. மேலும், டிவி, ரேடியோ, SMS, SM-களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு ஊடகச் சான்றிதழ் & தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அத்துடன், தேர்தல் முடிவடைந்த 75 நாள்களுக்குள் SM உள்பட டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்ட பிரசார செலவினங்களை ஒப்படைக்க வேண்டும்.
News March 21, 2026
தவெக கூட்டணி… கடைசி நேரத்தில் மாற்றம்

TN சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனைப்போட்டி உருவாகியுள்ளது. தவெகவுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலாவும், ராமதாஸும் கடைசி நேரத்தில் திடீர் திருப்பமாக புதிய கூட்டணியை உருவாக்கிவிட்டனர். இதனால், அந்த இருவரும் தவெகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல், கிருஷ்ணசாமியும் அதிமுகவுடன் கூட்டணியை பேசி முடித்துவிட்டதால், தவெக வரும் தேர்தலில் தனித்து களம் காண முடிவெடுத்துவிட்டதாம்.


