News December 9, 2024

தமிழக குடும்ப நல கோர்ட்களில் 33,000 வழக்குகள் தேக்கம்

image

தமிழகத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டுகளில் 33,000 வழக்குகள் தேக்கம் அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 40 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. இதில் விவாகரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட பல்வேறு குடும்ப விவகாரங்கள் குறித்த 33,213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 17,638 வழக்குகள் இந்தாண்டில் தொடரப்பட்டவை ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன.

Similar News

News March 11, 2026

வங்கியில் 1,300 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

IDBI வங்கியில் காலியாக உள்ள 1,300 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர், அசிஸ்டண்ட் மேனேஜர் பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி, 2 ஆண்டு பணி அனுபவம் தேவை. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். ஆண்டுக்கு சம்பளமாக ₹6.14 லட்சம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

News March 11, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 11, மாசி 27 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 11, 2026

ஈரானின் கண்ணிவெடியால் டிரம்ப் ஆவேசம்!

image

<<19350594>>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் <<>>வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையெனில், இதற்கு முன் கண்டிராத அளவில் இராணுவ நடவடிக்கை இருக்கும் என்று கூறியுள்ளார். அந்த கண்ணிவெடிகளை அகற்றினால், ஈரான் சரியான திசையில் நகரும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!