News December 9, 2024
அயனாவரம் சம்பவம் குறித்து ஸ்டாலின் ஏன் பேசவில்லை?

சென்னை அயனாவரத்தில் மனநிலை குன்றிய கல்லூரி மாணவியை 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார். கல்லூரி மாணவியை 7 பேர் பல மாதமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். பிற மாநில குற்றச் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஸ்டாலின், இதுகுறித்து ஏன் பேசாமல் இருக்கிறார்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News March 21, 2026
பாஜகவில் அங்கீகாரம் இல்லை: சரத்குமார் நாளை ஆலோசனை

நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பாஜகவில் இணைந்து 2 ஆண்டுகள் ஆகியும் சரத்குமாருக்கு இதுவரை முக்கிய பொறுப்பு வழங்கப்படாததால், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால், அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் சரத்குமார், நாளை முக்கிய முடிவை எடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
News March 21, 2026
இரட்டை இலைக்கு No.. கறாராக பேசுகிறாரா TTV?

டெல்லியில் அமித்ஷாவை TTV தினகரன் சந்தித்துள்ளார். தொகுதிப் பங்கீடு பற்றி அவர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரட்டை இலை சின்னத்தில் அமமுகவை போட்டியிட வைக்க அதிமுக வலியுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், அமமுக வேட்பாளர்கள் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்பதில் TTV உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அத்துடன், இரண்டு இலக்க தொகுதிகள் வேண்டும் என்பதிலும் அவர் விடாப்பிடியாக உள்ளாராம்.
News March 21, 2026
கரண்ட் பில் அதிகமா வருதா? மீட்டரில் இத செக் பண்ணுங்க!

EB மீட்டர் வேகமாக இயங்குகிறது என சந்தேகம் இருந்தால், இப்படி செக் பண்ணுங்க. லைட், ஃபேன், ஏசி என அனைத்து மின்சாதன பொருள்களையும் Off செய்யவும். கனெக்ஷன்களை Plug-ல் இருந்து அகற்றவும். இப்போதும் EB மீட்டரில் உள்ள சிவப்பு விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்ந்தால், வீட்டு வயரிங்கில் கசிவு உள்ளது அல்லது மீட்டர் பழுதடைந்துள்ளது என அர்த்தம். இதனாலும் EB பில் அதிகமாக வரலாம். தாமதிக்காமல் உடனே சரி செய்யுங்க.


