News December 9, 2024
விஸ்வகர்மா திட்டத்தை அனுமதிக்க மாட்டார் ஸ்டாலின்

விஸ்கர்மா திட்டத்தை தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி ஒன்றுதான் நிலையானது என்பதை அறிந்தே, அனைவரும் கல்வி கற்பதற்காக பல திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்துகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கல்வி கற்க செல்வோரை தடுத்து, குடும்பத் தொழிலில் ஈடுபட வைக்க விஸ்வகர்மா திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News March 21, 2026
‘பறவைக்காய்ச்சல்’ பயம் தேவையில்லை: தமிழக அரசு

கிண்டியில் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்த நிலையில், பறவைக்காய்ச்சல் தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற TN அரசு அறிவுறுத்தியுள்ளது. இறைச்சிக் கடை ஊழியர்கள் கவனமாக பணியாற்றவும், கழிவுகளை பொதுவெளியில் கொட்டக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN-ல் மனிதர்களுக்கு இதுவரை பறவைக்காய்ச்சல் பாதிப்பில்லை என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம்; தகவல்களுக்கு 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
News March 21, 2026
திமுக கூட்டணி உடைகிறதா?

CPM-ற்கு 5 சீட்களை மட்டுமே ஒதுக்க முடியுமென திமுக கறார் காட்டுவதால், அக்கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. 6 சீட்களை ஒதுக்க திமுக தவறினால் தனித்து போட்டியிடலாம் என CPM கட்சியின் அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவாக வேல்முருகனை தொடர்ந்து, CPM-மும் கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் இருப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
News March 21, 2026
ஒரு கிலோ விலை ₹10,000… எது தெரியுமா?

விலை உயர்ந்த நட்ஸ் என்றால் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவை தான் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் சில்கோசா என்ற பைன் விதைகள் தான் விலை உயர்ந்த நட்ஸாக உள்ளது. ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் இந்த நட்ஸ் ஒரு கிலோ ₹7,000 – ₹10,000 வரை விற்பனையாகிறது. இமாச்சல் & ஜம்மு காஷ்மீரின் உயரமான மலை பகுதிகளில் மட்டுமே கிடைப்பதும், அதன் செறிவான சத்துகளும் தான் இது காஸ்ட்லியாக இருப்பதற்கு காரணம்.


