News December 9, 2024

சுவர் விளம்பரம் தெரியும், WALKING விளம்பரம் தெரியுமா?

image

சுவர் விளம்பரம், டி.வி. விளம்பரம் பார்த்து இருப்போம். இதற்கு முற்றிலும் வித்தியாசமாக, மனிதர்கள் தங்கள் உடலில் போர்டை மாட்டிக் கொண்டு விளம்பரம் செய்த விநோதம் நடந்துள்ளது. பெங்களூரில் 10 நிமிட உணவு டெலிவரி செயலிக்காக இதுபோல 3 பேர் உடலில் போர்டை இரவில் மாட்டிக் கொண்டு நடந்து சென்றனர். யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து இக்காட்சியை வெளியிட, அது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News

News August 23, 2025

‘புலவர்’ அவதாரம் எடுத்த பாரதிராஜா

image

இயக்குநர் பாரதிராஜா நடிக்கும் புதிய படத்திற்கு ‘புலவர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரவி முருகையா இப்படத்தை இயக்குகிறார். ‘புலவர்’ படம் க்ரைம் கதைக்களத்தை மையமாக கொண்டது. ‘கடைசி விவசாயி’ படத்தை தயாரித்த சூப்பர் டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள்ளது. விரைவில் புலவரை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.

News August 23, 2025

கடன் வாங்கி கல்யாணம் பண்ணாதீங்க பாஸ்!

image

4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து குடும்பக் கடனை அடைத்தார் சென்னையை சேர்ந்த இளைஞர். இனி ரிலாக்ஸ் ஆகலாம் என நினைத்தவருக்கு, காத்திருந்தது அதிர்ச்சி. ஆம், ஊரையே கூட்டி, அவருக்கு தடபுடலாக கல்யாணம் செய்தனர் பெற்றோர். அதற்கு ₹17 லட்சம் கடன் வாங்கினார்களாம். இப்போது அந்த கடனை அடைக்க ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் அவர், ‘கல்யாணம் பண்ண இப்படி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க’ என அட்வைஸ் செய்துள்ளார். உங்க அனுபவம் எப்படி?

News August 23, 2025

TN விவசாயிகளுக்காக பேசிய கவர்னர் RN ரவி!

image

டெல்லியில், மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்த கவர்னர் RN ரவி, TN விவசாயிகள், கைவினை கலைஞர்களுக்காக கோரிக்கை விடுத்ததாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்துவதாக திமுக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!