News December 8, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் நாளை குறை தீர்க்கும் முகாம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை(09.12.24) காலை ஆட்சியர் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியிடம் வழங்கி பயன் பெறலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
விருதுநகர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 5, 2026
விருதுநகர்: 126 ஆட்டு கிடா, 260 சேவல் பலியிட்டு நேர்த்தி கடன்

விருதுநகர் அருகே உள்ள வள்ளியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை மற்றும் அன்னதான பூஜை, 36ம் ஆண்டு பூஜை நடைபெற்றது. இந்த பௌர்ணமி பூஜையில் தமிழகத்தில் உள்ள பக்தர்கள் நேர்த்திக்கடனாக 126 ஆட்டுக்கடாய், 260 சேவல் பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
News March 5, 2026
விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.100 விலை குறைந்து ரூ.3200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நல்லெண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.6105 ஆகவும் பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.20080 ஆகவும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆக விருதுநகர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.300 விலை குறைந்து ரூ.5900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


