News December 8, 2024
விருதுநகரில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் டிச.14 அன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிச.8 முதல் டிச.12 ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
Similar News
News March 5, 2026
விருதுநகர்: 126 ஆட்டு கிடா, 260 சேவல் பலியிட்டு நேர்த்தி கடன்

விருதுநகர் அருகே உள்ள வள்ளியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை மற்றும் அன்னதான பூஜை, 36ம் ஆண்டு பூஜை நடைபெற்றது. இந்த பௌர்ணமி பூஜையில் தமிழகத்தில் உள்ள பக்தர்கள் நேர்த்திக்கடனாக 126 ஆட்டுக்கடாய், 260 சேவல் பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
News March 5, 2026
விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.100 விலை குறைந்து ரூ.3200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நல்லெண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.6105 ஆகவும் பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.20080 ஆகவும் சூரியகாந்தி எண்ணெய் ரூ.2500 ஆக விருதுநகர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.300 விலை குறைந்து ரூ.5900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News March 4, 2026
விருதுநகர் : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

விருதுநகர் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <


