News December 8, 2024

சிவகங்கையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

image

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போதை பொருள்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி  சிவகங்கையில் டிச.14 அன்று காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயரினை https;//sivaganga.nic.in என்ற தரவுத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News March 10, 2026

சிவகங்கை: ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார்

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் கண்ணன் நேற்று, திமுக மாவட்ட துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் சேங்கை மாறன் முன்னிலையில் கட்சி ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைத்து கொண்டார். சேர்மன் சேங்கை மாறன் கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். உடன் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இருந்தனர்.

News March 10, 2026

சிவகங்கை: விசாரணை கைதி உயிரிழப்பு; கோர்ட் உத்தரவு.!

image

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் மனுத்தாக்கல் செய்தார். அவசர வழக்காக நேற்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஆகாஷ் உடலை உடனடியாக உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை கைவிடவும் அறிவுறுத்தி, வழக்கை நாளை (மார்ச்.11) புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

News March 10, 2026

சிவகங்கை: இளைஞர் வெட்டி கொலை; மேலும் 2 பேர் கைது.!

image

சிவகங்கை பிள்ளைவயல் காளிகோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ், கடந்த 2025 ம் ஆண்டு பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அருண்பாண்டி உட்பட 10 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த முத்துநகர் ஜெயசுப்பு, அழகுவிக்னேஷ் ஆகிய இருவரையும் சென்னையில் வைத்து போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!