News December 8, 2024

“அன்று எம்ஜிஆர்.. இன்று விஜய்”.. தவெக மாஸ் அறிக்கை!

image

திமுகவை விமர்சித்த விஜய்யை கிண்டல் செய்யும் வகையில், சினிமா செய்திகளை தான் பார்ப்பதில்லை என உதயநிதி கூறியிருந்தார். இதற்கு தவெக காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், எம்ஜிஆரை கூத்தாடி என ஏளனம் செய்த திமுகவை, மக்கள் ஒதுக்கி வைத்தார்கள். இன்று விஜய் மீது அதே ஏளனம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. எனவே, 2026இல் திமுகவை ஒதுக்கிவிட்டு, விஜய் ஆட்சியில் அமர்வது உறுதி எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

EPS-ன் பொதுச் செயலாளர் பதவியை பாஜக பறிக்கும்: CM

image

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு பாஜகவால் ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு EPS-க்கு பதில் வேறு ஒருவரை பாஜக தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. EPS-ஐ இந்த தேர்தல் வரைக்கும்தான் பாஜக பொறுப்பில் வைத்திருக்கும். ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்க மறுத்திருந்தால் இப்போதே அவர் பதவி பறிபோயிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 7, 2026

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காது: மத்திய அரசு

image

நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்காது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளதாகவும், போதுமான எண்ணெய் இருப்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்காது என்றும் உறுதியாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 7, 2026

தமிழக அரசியலில் வியப்பான நகைப்பு: H.ராஜா

image

மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர், குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறுவதாக H.ராஜா விமர்சித்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வது தமிழக அரசியலில் பார்க்க முடிந்த வியப்பான நகைப்பு என்றும் விமர்சித்துள்ள அவர், மனைவி, குழந்தைகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு, அதே நபர் மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதாக சாடியுள்ளார். யாரை சொல்கிறார்?

error: Content is protected !!