News December 8, 2024
EWS இடஒதுக்கீடு தவறானது: முன்னாள் நீதிபதி

உயர்வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமில்லாது, தார்மீக ரீதியாகவும் தவறானது என முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தெரிவித்துள்ளார். 10% இடஒதுக்கீடு பெறும் உயர்வகுப்பினர், வரலாற்று ரீதியாக எந்த ஒடுக்குமுறைகளையும் அனுபவித்தது இல்லை எனவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆளானவர்களுக்காகவே இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News August 26, 2025
ஒரே படத்தில் நடித்த நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

KGF பட புகழ் <<17509653>>தினேஷ் மங்களூரு<<>> மரணமடைந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அவரின் மரணம் குறித்து புது தகவல் வெளிவந்துள்ளது. இவர் ‘காந்தாரா’ பட ஷூட்டிங்கில் இருந்த போது பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று, வீடு திரும்பிய சில நாள்களில் மரணமடைந்துள்ளார். ஏற்கெனவே, இப்படத்தில் நடித்து வந்த ராஜேஷ் , நிஜூ, கபில் ஆகியோரும் மரணமடைய, இது அபசகுணமா என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
News August 26, 2025
விஜய் VS விஷால்… யார் மாஸ்?

விஜய் அரசியல் வருகையால் 2026 தேர்தல் களம் அவ்வளவு எளிதாக இருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால், அவருக்கு எதிராக <<17519653>>விஷாலை <<>>களமிறக்க திமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளிவருகின்றன. உண்மையில விஷால் பிரபலம் தான், அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், விஜய்யை எதிர்த்து வெற்றிபெறும் அளவுக்கு விஷாலுக்கு மாஸ் இருக்கிறதா என்றால், அது கேள்வி குறிதான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
News August 26, 2025
இரட்டை வேடம் போடும் திமுக: அன்புமணி

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என TN அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி அறிக்கை வெளியிட்ட அன்புமணி, இத்திட்டத்துக்காக கிணறுகள் அமைக்க ONGC-க்கு அனுமதி அளித்தது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்றும், இந்த முடிவை அவர்கள் தன்னிச்சையாக எடுத்ததாக திமுக நாடகமாடுவதாகவும் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் சாடினார்.