News March 23, 2024

ராம்நாடு: இண்டி கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

இராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நாடாளுமன்றத் தொகுதியில் இண்டி கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
கீழக்கரை சார்பாக நகர் கழக செயலாளர் பசீர் அஹமது தலைமையில் கீழக்கரை நகர் கழக நிர்வாகிகள் பெரும்பாலோனோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து கழக நிர்வாகிகள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.

Similar News

News April 7, 2025

இரவு நேர ரோந்து பணி அதிகாரிகளின் விபரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர் இன்று (ஏப்ரல் 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் . இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

News April 6, 2025

பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் பழுது

image

ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பால தூக்குப் பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட தூக்கு பாலம் தற்போது பழுதாகி இருப்பதாக வெளி வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குத்து பாலம் ஒரு பக்கம் தூக்கியும், இன்னொரு பக்கம் இறக்கமாக இருந்ததால் அதனை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 6, 2025

ராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

image

பாம்பன் ரயில் புதிய செங்குத்து பாலத்தை இன்று திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அனுராதாபுரம் விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாம்பம் வந்தார். பின்னர் பாம்பன் பாலத்தை திறந்து வைத்த மோடி தற்போது ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

error: Content is protected !!