News December 8, 2024
இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் தாக்கத்தால் வரும் 10ஆம் தேதி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்பின், தமிழகத்தில் கனமழையானது 3 நாள்களுக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
நாகை: திமுகவில் இணைந்த அதிமுக-வினர்

நாகை மாவட்டம், குறிச்சி ஊராட்சி ஆய்மலை கிராமத்தில் அதிமுக முன்னாள் கிளைக் செயலாளர் பிரசாத் தலைமையில், அக்கட்சியில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் விலகி திமுக ஒன்றிய செயலாளர் வடவூர் க.ராஜேந்திரன் தலைமையில் திமுக-வில் நேற்று இணைந்தனர். இதையடுத்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!
News March 8, 2026
TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.
News March 8, 2026
விஜய் மனைவிக்கு திமுகவில் முதல் ஆதரவு வந்தது

விஜய் மனைவி சங்கீதாவுக்கு திமுகவில் இருந்து வெளிப்படையாக ஆதரவு வந்துள்ளது. சங்கீதாவிற்கு அவரது கணவர் வீட்டில் வசிக்கும் உரிமையை சட்டம் தந்திருக்கிறது; காவல்துறையின் உதவியுடன் வீட்டிற்குள் நுழையலாம், அதனை கணவரால் (விஜய்) தடுக்க இயலாது என்று திமுக எம்பியான சல்மா கூறியுள்ளார். விமன் ஹெல்ப்லைன் 181 வழியாக சட்ட உதவி கோர அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.


