News December 8, 2024
100க்கும் மேற்பட்ட நாதகவினர் திமுகவில் இணைந்தனர்

சமீபமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், திருவள்ளூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் சபரீஷ், சதீஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். ”சங்கி என்றால் நண்பன்” என்று சீமான் பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Similar News
News March 4, 2026
தங்கம் விலை மொத்தம் ₹4,600 குறைந்தது

அமெரிக்கா – ஈரான் இடையே போர் வெடித்துள்ளதால், ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
இம்மாதம் தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. மார்ச் 1-ம் தேதி சவரனுக்கு ₹1,26,200-ஆக இருந்த தங்கம் விலை சுமார் ₹4,600 குறைந்து ₹1,21,600-க்கு இன்று (மார்ச் 4) விற்பனை செய்யப்படுகிறது.
News March 4, 2026
பழி போட்டு முடக்க பார்க்கிறார்கள்: விஜய்

சமீபகாலமாக விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக தவெகவினர் சொல்கின்றனர். இதற்கு தஞ்சை கூட்டத்தில் மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய், தன்னை முடக்கிவிடலாம் என எண்ணி தொடர்ந்து தன்மீது சிலர் பழி போடுவதாக பேசியுள்ளார். மேலும், இந்த விஜய்யை முடக்கிவிடலாம் எனவும் ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யை எப்படி முடக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 4, 2026
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி.. சு.வெங்கடேசன் எதிர்ப்பு

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தில் நுழைவு வாயிலுக்கு ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயர் வைத்துள்ளதற்கு சு.வெங்கடேசன் MP கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கர்தவ்ய த்வார்’ என்றால் தமிழில் ‘கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள் என குறிப்பிட்ட அவர், பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தி திணிப்பு மட்டுமே என்றும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழில் பெயர் சூட்டவும் வலியுறுத்தியுள்ளார்.


