News December 8, 2024
ஆதவ் அர்ஜுனா மீது ஆக்ஷன் எடுக்க திருமா தயங்குவது ஏன்?

DMK கூட்டணியில் இருந்து கொண்டே ‘மன்னர் ஆட்சி’ என VCK Dy GS ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும் என VCK நிர்வாகிகள் திருமாவுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது. ஆனால், விசிகவின் ‘வெல்லும் சனநாயம்’, ‘மது ஒழிப்பு மாநாடு’ ஆகியவற்றை நடத்திய ‘Voice Of Commons’ ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம். அதனாலேயே திருமா சற்று தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
Similar News
News August 29, 2025
AI புரட்சியில் முதல் புள்ளி வைத்த ரிலையன்ஸ்

AI-க்கான ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற தனி நிறுவனத்தை தொடங்குவதாக <<17553965>>அம்பானி<<>> அறிவித்துள்ளார். அதன்படி, ‘ஜியோ ஃபிரேம்ஸ்’ என்ற AI ஸ்மார்ட் கண்ணாடியை அவர் அறிமுகம் செய்துள்ளார். குரல் கட்டளைக்கு ஏற்ப இந்த கண்ணாடி செயல்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், Jio PC என்ற ஸ்மார்ட் கம்யூட்டர் அமைப்பையும், ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘ரியா’ என்ற குரல் கட்டளைக்கு பதில் அளிக்கும் AI வசதியையும் அறிமுகம் செய்துள்ளார்.
News August 29, 2025
விஸ்வநாதன் ஆனந்த் கொடுத்த அட்வைஸ்.. மறக்காத குகேஷ்

ஓவர் கான்ஃபிடன்ஸால் முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தோற்றதாக குகேஷ் தெரிவித்துள்ளார். பின்னர் விஸ்வநாதன் ஆனந்த், தானும் தனது முதல் உலக சாம்பியன்ஷிப்பில் தோற்றதாகவும், பிறகு கம்பேக் கொடுக்க தனக்கு 11 போட்டிகள் இருந்த நிலையில், உனக்கு தற்போது 13 போட்டிகள் உள்ளது என அட்வைஸ் கொடுத்ததாகவும் குகேஷ் நினைவுகூர்ந்துள்ளார். இந்த அட்வைஸ் தான் சாம்பியன்ஷிப் அடிக்க தனக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
சற்றுமுன்: ₹2,500ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் வரும் செப்.1 முதல் 2026 ஆக. 31 வரை இந்த உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.