News December 8, 2024
BGT: ஆஸி., அபார வெற்றி

IND அணிக்கு எதிரான 2வது BGT டெஸ்ட் போட்டியில் AUS அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் முறையே 180 மற்றும் 337 ரன்கள் எடுத்தனர். பின்னர் 2வது இன்னிங்ஸில் ஆஸி., அணியின் அபார பந்துவீச்சால் IND அணி 175 ரன்களுக்கு சுருண்டது. 19 ரன் இலக்குடன் ஆடிய ஆஸி., 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது.
Similar News
News August 29, 2025
AI புரட்சியில் முதல் புள்ளி வைத்த ரிலையன்ஸ்

AI-க்கான ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற தனி நிறுவனத்தை தொடங்குவதாக <<17553965>>அம்பானி<<>> அறிவித்துள்ளார். அதன்படி, ‘ஜியோ ஃபிரேம்ஸ்’ என்ற AI ஸ்மார்ட் கண்ணாடியை அவர் அறிமுகம் செய்துள்ளார். குரல் கட்டளைக்கு ஏற்ப இந்த கண்ணாடி செயல்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், Jio PC என்ற ஸ்மார்ட் கம்யூட்டர் அமைப்பையும், ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘ரியா’ என்ற குரல் கட்டளைக்கு பதில் அளிக்கும் AI வசதியையும் அறிமுகம் செய்துள்ளார்.
News August 29, 2025
விஸ்வநாதன் ஆனந்த் கொடுத்த அட்வைஸ்.. மறக்காத குகேஷ்

ஓவர் கான்ஃபிடன்ஸால் முதல் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தோற்றதாக குகேஷ் தெரிவித்துள்ளார். பின்னர் விஸ்வநாதன் ஆனந்த், தானும் தனது முதல் உலக சாம்பியன்ஷிப்பில் தோற்றதாகவும், பிறகு கம்பேக் கொடுக்க தனக்கு 11 போட்டிகள் இருந்த நிலையில், உனக்கு தற்போது 13 போட்டிகள் உள்ளது என அட்வைஸ் கொடுத்ததாகவும் குகேஷ் நினைவுகூர்ந்துள்ளார். இந்த அட்வைஸ் தான் சாம்பியன்ஷிப் அடிக்க தனக்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
சற்றுமுன்: ₹2,500ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் வரும் செப்.1 முதல் 2026 ஆக. 31 வரை இந்த உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.