News December 8, 2024

BGT 2வது டெஸ்ட்: 175 ரன்களில் சுருண்ட இந்தியா

image

3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவில் பண்ட் 28(31), அஸ்வின் 7(14), ஹர்ஷித் ராணா 0(12), நிதிஷ் குமார் ரெட்டி (42), சிராஜ் 7(7) ஆகியோர் எடுத்து வெளியேற, பும்ரா 2(5) ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி 175 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆஸி.க்கு 19 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸி.யில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள், ஸ்டார்க், போலந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Similar News

News March 20, 2026

NDA-வா? அதிமுக கூட்டணியா? TTV தினகரன் விளக்கம்

image

தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைமை அதிமுகவா பாஜகவா என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே, டெல்லி அனுமதியுடனே அதிமுக செயல்படுவதாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருக்கிறது என்று TTV தினகரன் கூறியுள்ளார். அதேநேரம், NDA கூட்டணி என்பது பாஜக தலைமையிலான கூட்டணி என்பதை CM-க்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 20, 2026

19 சீசன்கள்.. IPL-ன் அசைக்க முடியாத 4 ஜாம்பவான்கள்!

image

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட IPL-ன் அனைத்து சீசன்களிலும்(19 சீசன்கள்) 4 பேர் மட்டுமே விளையாடியுள்ளனர். தோனி(CSK, PWI), ரோஹித் சர்மா(MI, DCH), விராட் கோலி(RCB) ஆகியோருடன் இந்த லிஸ்ட்டில் மனிஷ் பாண்டேவும்(RCB, SRH, DC, PWI, MI, LSG, KKR) உள்ளார். இதில், அனைத்து சீசனிலும் ஒரே அணிக்காக விளையாடிய வீரராக விராட் கோலி மட்டுமே உள்ளார். ரஹானே, ஜடேஜா ஆகியோர் 18 சீசன்களில் விளையாடியுள்ளனர்.

News March 20, 2026

புதுச்சேரியில் தவெக கூட்டணி முடிவு மாறியது!

image

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெக தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது. அங்கு, ஆளும் NR காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தவெக 9 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதனால், இன்று (அ) நாளை 30 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளாராம்.

error: Content is protected !!