News December 8, 2024

கூட்டணி மாறும் விசிக? திருமா பதில்

image

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். VCKவில் யார் தவறு செய்தாலும் முகாந்திரத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சி நலனுக்கு எதிராக இருப்பதாக நிர்வாகிகள் உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். VCK புதிய கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 5, 2026

மொத்தமாக ₹8,500 சம்பள உயர்வு.. இன்ப அதிர்ச்சி

image

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதன்படி, <<19299732>>டாஸ்மாக்<<>> ஊழியர்களுக்கு மேலும் ₹1,000 சம்பளம் உயர்வு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக <<19242295>>₹2,500<<>> சம்பளம் உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ₹5,000 உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் அந்தந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

News March 5, 2026

வாழ்க்கை பிரகாசிக்க செய்யும் வெண்பூசணி வழிபாடு

image

புதுக்கோட்டை, திருமயம் என்னும் ஊரில் 350 ஆண்டுகள் பழமையான கோட்டை பைரவர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி, தனிகோயில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே. இக்கோயிலில் மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வெண்பூசணி விளக்கேற்றி வழிபடுவது, அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உதவுமாம். பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் அபிவிருத்தி ஏற்படும்.

News March 5, 2026

காங்., – திமுக கூட்டணி.. மாணிக்கம் தாகூர் ரியாக்‌ஷன்

image

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தேவை என மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கூறி வந்த நிலையில், திமுக 3+1 சீட்களை கூடுதலாக ஒதுக்கி காங்.,-ஐ கூட்டணியில் தக்கவைத்து கொண்டுள்ளது. இந்நிலையில், தலைமையின் முடிவை ஏற்பதாக X பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பொம்மை காரை கையில் வைத்துள்ள சிறுவன், BMW காரை ஏங்கி பார்ப்பது போன்ற போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில், கண்டிப்பாக ஒருநாள் ஆசை நிறைவேறும் என்ற வாசகம் உள்ளது.

error: Content is protected !!