News December 8, 2024
இந்தியாவுக்கு ₹2,940 கோடி கடன் வழங்க ஒப்புதல்

இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ₹2,940 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கதி சக்தி திட்டம் மற்றும் தேசிய சரக்கு கையாளுகை கொள்கையை செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் சரக்கு, சேவை ஏற்றுமதியை ₹168 லட்சம் கோடியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.
Similar News
News March 16, 2026
விலை குறைந்தது.. காலையிலேயே மகிழ்ச்சி

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்றைய (மார்ச்-16) நிலவரப்படி, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்டவைகளின் விலை குறைந்துள்ளது. அதேநேரம் வெங்காயம் ₹20,தக்காளி ₹22, உருளைக்கிழங்கு ₹25, கத்தரிக்காய் ₹32,சுரைக்காய் ₹36, புடலங்காய் ₹35 உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
News March 16, 2026
கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: RS பாரதி

இடையில் வருவதெல்லாம் கடந்து செல்லும் மேகங்கள் என விஜய்யை, திமுகவின் RS பாரதி சாடியுள்ளார். மேலும், கருத்துக்கணிப்புகளின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் ஆருடம் தெரிவித்தார். லயோலாவின் IPDS, Times Now கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என கூறியுள்ள நிலையில், அது பேசுபொருளாக மாறியுள்ளது.
News March 16, 2026
யாருடன் கூட்டணி?.. ராமதாஸ் இன்று அறிவிக்கிறார்

ராமதாஸ் தரப்பு (பாமக) இதுவரை கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், யாருடன் கூட்டணி செல்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தவெக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டி உள்ளிட்ட அறிவிப்புகளை ராமதாஸ் இன்று வெளியிட இருப்பதாக அவரது மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.


