News December 8, 2024
ஒரே வாரத்தில் போக்கு விதிகளை மீறிய 3,021 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டத்தில் நேற்று(டிச.07) குமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உட்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் 474 பேர் மீது போக்குவரத்து விதி மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒருவாரத்தில் போக்குவரத்து விதி மீறிய 3,021 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதி மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என போலீசார் கூறினர்.
Similar News
News August 13, 2025
BREAKING: குமரி படகு போக்குவரத்து திடீர் ரத்து!

கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் படகு போக்குவரத்து நடைப்பெற்று வருகிறது. இன்று(ஆக.13) கன்னியாகுமரி கடலில் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தற்காலிகமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. நிலைமை சீரானவுடன் பழகு போக்குவரத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு (இன்று ஆக.13) துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News August 13, 2025
குமரி: இந்த App-ஐ உடனே Download பண்ணுங்க.!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த App நம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <