News December 8, 2024
அடம் பிடிக்கும் ஷிண்டே.. MH அரசியலில் புது குழப்பம்!

MHஇல் CM பதவியேற்பு விழா முடிந்து 4 நாள்கள் ஆகியும் அமைச்சரவை குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல கண்டிஷன்களை போட்டுத் தான் ஃபட்னவிஸுக்கு CM பதவியை ஷிண்டே விட்டுக்கொடுத்ததாகத் தெரிகிறது. அதில், Dy CM, உள்துறை தனக்கு வேண்டும் என்பதும் அடங்கும். ஆனால், உள்துறையை தன் வசம் வைத்திருக்க CM விரும்புவதால் ஷிண்டே தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 23, 2026
AK 47 துப்பாக்கிகளுக்கு லோகி கனெக்ஷன்.. போலீஸ் ஷாக்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னை அசோக் நகரில் வாகன சோதனையில் 10-க்கும் மேற்பட்ட ‘AK 47’ துப்பாக்கிகளுடன் வேன் ஒன்று சிக்கியது. அதிர்ந்து போன போலீசார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், இவை டம்மி துப்பாக்கிகள் என்பதையும், லோகேஷ் கனகராஜ் நடித்துவரும் ‘DC’ பட ஷூட்டிங்கிற்காக கொண்டு வரப்பட்டவை என்பதையும் போலீஸ் உறுதி செய்தனர். இதையடுத்து லைசன்ஸை சரிபார்த்தபின் அந்த வேனை விடுவித்தனர்.
News March 23, 2026
பொன்முடிக்கு Bye Bye சொன்னதா திமுக தலைமை?

சர்ச்சை கருத்துகள் பேசி சிக்கியதால் வரும் தேர்தலில் பொன்முடிக்கு சீட் கிடைப்பது கடினமே என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது நடக்கும் வேட்பாளர் நேர்காணலில் பொன்முடி பங்கேற்கவில்லை என ஒரு தகவல் கசிந்துள்ளது. இவருக்கு பதிலாக இவரது மகன் கௌதம சிகாமணிக்கு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது
News March 23, 2026
புதுச்சேரியில் தவெக – நேமக கூட்டணி.. கடைசி நேர திருப்பம்

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், திடீர் திருப்பமாக சுயேட்சை MLA நேருவின் நேயம் மக்கள் கட்சியுடன் (நே.ம.க) கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளையும் தவெக ஒதுக்கியுள்ளது. தவெக தனித்தே போட்டி என்ற முடிவை மாற்றிய விஜய், வேட்புமனு தாக்கலுக்கு 3 மணிநேரமே உள்ளபோது கூட்டணி அமைத்து, அக்கட்சிக்கு சீட்டும் வழங்கியுள்ளார்.


