News December 8, 2024

திருவள்ளூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த  200 பேர் விலகல் 

image

திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சியை சார்ந்த மாவட்டத் தலைவர் சபரீஷ் தலைமையில் 200 பேர் அக்கட்சியில் இருந்து விலகி இன்று காலையில் திமுக ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.  அனைவருக்கும் அமைச்சர் நாசர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Similar News

News March 11, 2026

ஆவடி அருகே கணவரை படுகொலை செய்த இளம்பெண்!

image

திருவள்ளூர்: ஆவடி, கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(39), மனைவி மகேஸ்வரி(29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் போதையில் வந்த அவர் மகேஸ்வரியின் தாலியை பிடித்து இழுத்ததால் ஆத்திரமடைந்தவர், அருகே இருந்த கேபிள் ஒயரால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில், ராஜேஷ்குமார் உயிரிழந்தார். மகேஸ்வரியை கைது செய்த போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

News March 11, 2026

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 10, 2026

திருவள்ளூரில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா?

image

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!