News December 8, 2024
விசிகவுக்கு முதலில் மறுப்பு.. பின்னர் அனுமதி!

மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடிக்கம்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல் 25 அடி உயர கொடிக்கம்பத்தை 45 அடியாக உயர்த்தியதால், மாவட்ட நிர்வாகம் திருமாவளவன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருந்தது. இது, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்காக, திமுக மேற்கொள்ளும் பழிவாங்கல் நடவடிக்கை என பல்வேறு தரப்பிலும் விமர்சனம் எழுந்த நிலையில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 26, 2025
‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ ஏமாற்று வேலை: EPS

4 ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சி முடிய ஓராண்டு மட்டுமே உள்ளபோது கவர்ச்சிகரமான திட்டங்களை ஸ்டாலின் அறிவிப்பதாக EPS சாடியுள்ளார். மேலும் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ என்பது ஏமாற்று வேலை என்றும் விமர்சித்துள்ளார். புதிய திட்டங்களை கொண்டுவராத திமுக, அதிமுகவின் திட்டங்களை முடக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
News August 26, 2025
CM ஸ்டாலின் இல்லை.. சேகர்பாபு, PTR பங்கேற்பு

ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சி இருப்பதால் கேரளாவின் ‘லோக அய்யப்ப சங்கமம்’ விழாவில் பங்கேற்கவில்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள CM பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், CM ஸ்டாலினுக்கு பதிலாக செப்.20 அன்று அமைச்சர்கள் சேகர்பாபு, PTR அந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, TN-ல் கோயிலுக்கு செல்லாத ஸ்டாலின், கேரள அரசின் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை கூறியிருந்தார்.
News August 26, 2025
வரலாற்றில் இன்று

*1910 – நோபல் பரிசு வென்ற அன்னை தெரசா பிறந்த தினம்
*1954 – நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரண் பிறந்த தினம்
*1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது
*1972 – 22-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் தொடங்கியது
*1978 – விண்ணுக்கு பயணித்தார் முதல் ஜெர்மனி விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான்.