News December 8, 2024

ஊட்டி முன்னாள் கமிஷனர் சஸ்பெண்ட்

image

நீலகிரி, ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு பணம் வாங்கி, அனுமதி வழங்குவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.அவரிடம் கணக்கில் வராத பணம் 11.70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜஹாங்கீர் பாஷாவை முன்தேதியிட்டு (நவ.29) சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News March 4, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்! முக்கிய தகவல்

image

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

நீலகிரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

நீலகிரி: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

image

நீலகிரி மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!